April 17, 2008


சென்னையின் நீச்சல்குளங்கள்

வேறிடத்தில் இருக்கும் வேர்கள், பூக்க‌ளுக்கு வேருண்டு என்ப‌து,
வேர்க‌ள் பூப்ப‌து, நீர் விநியோகம்-இவை, வான், கடல்,
நட்சத்திரங்களைப் போல அற்புத‌மாயிருக்கின்ற‌ன‌

இடங்களை நகர்த்தும் ச‌க்க‌ர‌ உருளைகளாய்
எண்க‌ளைத் துற‌ந்த‌ கடிகாரங்கள்; நொடிமுள்ளின் சத்தம்,
பிற‌ எல்லாவற்றிற்கும் சுருதியாய் உதவுகிறது

நிலத்திலும் காற்றிலும் நீல‌த்தைப் பரப்பும் இரவும்
பகலும், த‌ன்னையே உண்டு வாழும்; வானத்தையும்
நிலத்தையும் இழந்த பறவையாகிக் கொண்டிருக்கும் நகரத்தில்,

வாசல்கள் தெற்கைப் பார்த்திருக்கின்றன; வாசலற்ற
வீடுகள், கடலிலிருந்து எழுந்து வரும் சூரியனிடமிருந்து
மறைந்திருக்கும் மரநிழலில்

2 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்குங்க கவிதை. என்னோட இரண்டு வேண்டுகோள் :

1. word verificationஐ எடுக்க முடியுமா.?

2. வலைத் திரட்டிகளில் இணைந்து கொள்ள இயலுமா.?

இரா. சுந்தரேஸ்வரன் said...

ந‌ன்றி!

word verification-ஐ நீக்கிவிட்டேன்!

இப்போதைக்கு வ‌லைத்திர‌ட்டிக‌ளில் இணையும் எண்ண‌ம் என‌க்கில்லை.