கண்ணாடியைப் பார்க்க மறுப்பவனின்
அறியாமையை நீ நம்ப ஆரம்பித்த பிறகு, அது
உன்னைப் பீடித்து, இப்போது பரவிக் கொண்டிருக்கிறது
உன்னிடம் இருப்பது ஒளியா, இருளா
என்று தெரியாத நிலையில், அறியாத ஊரின் தெருவில்
நின்று, பகிர்தலைப் பற்றி என்ன சொல்லப் போகிறாய்?
வார்த்தைகளையும் முகங்களையும் விற்பவனின்
உதவியுடன் நீ கவிதை எழுதிய பின், எஞ்சியிருக்கும் இரவை, உன்
பிம்பத்தைச் சரிசெய்ய செலவிடாமல், விண்ணில்
எறிந்துவிட முடிவெடுத்திருக்கிறாய், சரி, சற்று இளைப்பாறு!
ஊற்றுக்கண் அற்ற பிரகாசமான ஒளியை, நேர்ப்படுத்தி,
பஞ்சத்தின் எல்லைவரை கொண்டு செல்லும் பாலம் அமைக்க
ஒரு தூணாக உன்னை நிறுவிக்கொள்கிறாய்
April 24, 2008
பாலத்தின் தூண்களுக்கிடையேயான தூரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment