அரிய, கலப்பற்ற, வலுவான
உலோகத்திற்குப் பதிலாக, தினமும்
வெளிர்நிறப் பூக்களைப் பூக்கும் கொடியினைக் கொண்டு
கிரீடம் செய்யச் சொல்பவர்களுக்கு,
பூவையோ, ஏன் கிரீடத்தையோ கூட,
ஆளுக்கு ஒன்றென கொடுத்துவிடவேண்டும்
கிரீடத்தைச் செய்தவரும், அணிபவரும்,
அவர் ஒருவரே ஆனாலும்,
கிரீடத்தின் நிழலைக் கண்டு கண்கூசுபவர்களிடம்,
'கிரீடங்களை மன்னர்தாம் அணியவேண்டும்'
என்பதைச் சளைக்காமல் மறுக்கும் போதுதான், அணிந்தால்
கழற்றமுடியாத பிரச்சினையை அது தருகிறது
என்னும் உண்மை அவர்களுக்குப் புரியும்; கண்ணாடியில்,
தலை அல்லது கிரீடம், இதில் ஒன்று மட்டுமே
தெரிகிற பிரச்சினையும் அதைப் புரிந்துகொள்ளும் திறமும்
அவர்களுக்கு வாய்க்கப் பெறவில்லை
'எல்லோருக்குமான கிரீடம்,
வானம்தான்', என்னும் வசனத்திற்குள்,
'இப்போதுதான் பிறந்த குழந்தைக்கு,
இத்தனை கனமாய்த் தெரியும் கிரீடம் எதற்கு?'
என்கிற கேள்வி மறைந்திருந்தாலும்
வானத்தையும் கிரீடத்தையும் பற்றி
தங்களுக்குள்ளே விவாதித்துக் கொள்வது
தத்துவவாதிகளின் பணிதானே?
April 29, 2008
இன்னுமொருவிதமாய் வானம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hmmm... last stanza was good,
Post a Comment