குளிர்ந்த காற்றில் சாம்பலாய் மிதக்கும்
அதிகாலை வெளிச்சத்தில், எனது முதலெழுத்தைத் தேடி,
என் ஞாபகத்தைப் பலப்படுத்திக் கொள்கிறேன்
பூக்களுக்காக, சிறுமி குடம் குடமாய் நீரூற்றுவதும்,
நிலவொளியின்போது எழுத்துகள் மரமேற, பழங்கள் தரைவிழுவதும்,
தொடர்ந்து எழுத்துகள் விழுவதும், அருகில் நிகழ்வது போல் கேட்கிறது
விடைபெறுதல்கள் நேர்கிற அறைகள், என் வழக்கமான
கற்பனைகளை நிரப்புகின்றன; நடமாட்டத்தையும் பெயர்களையும்
இழந்துவிட்ட இந்தத் தெருக்களைக் கடப்பதென்பது முடியாமல் போகிறது
எனது புத்தகங்களுக்குள்ளே கண்டுபிடிக்கப்படாமல் மறைந்திருக்கிற
மவுனங்களைப் பற்றி ஏதாவது சொல்லிட வேண்டுமென்றால்
அவை சிறிய கீற்றுகளே என்று சொல்வேன்
June 5, 2008
சொல்லாலானவன் அந்தியிடம் சொன்னது
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கவிதையும் அதைவிட தலைப்பும் மிகப் பிடித்திருக்கிறது.
நன்றி, ஜ்யோவ்ராம் சுந்தர்! உங்கள் தொடர் வாசிப்பு எனக்கு ஊக்கமளிக்கிறது.
விடைபெறுதல்கள் நேர்கிற அறைகள், என் வழக்கமான
கற்பனைகளை நிரப்புகின்றன; நடமாட்டத்தையும் பெயர்களையும்
இழந்துவிட்ட இந்தத் தெருக்களைக் கடப்பதென்பது முடியாமல் போகிறது
அருமையா இருக்குங்க
நன்றி, கென்!
Post a Comment