நீ தெரிந்தெடுத்த சொற்களையே
அவன் கையாளக் கூடும்;
தோல்விகளுக்கு ஆறுதல்
தருபவனல்லன் அவன்;
விருந்தோம்ப அழைத்து வராதே!
எழுத்துகளுக்கு வாசம் தரும்
காகிதங்களின் இயல்பு பற்றியும்
தேவதைகளை ஈர்க்கும்
காந்தக்கல் பற்றியும்
இரவு முழுக்க பேசிவிட்டு
உனது சந்தேகங்களுக்குப் பதிலுரைக்காமல்
அதிகாலையில் விடைபெற்றுச் செல்வான்;
நீயும் அவனும் ஒரே உலகில்
வாழ இயலுமா,
என்னும் கேள்வியில் முடியலாம்
உன் தினசரித் தேடல்கள்;
உன் நினைவிலிருந்து
அவன் நீங்க ஆகும் காலத்தை நீட்டிக்கும்படி
வினைகள் தொடரலாம்
May 19, 2008
ஒரு விமரிசனத்தின் அதிகாலைகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Sundar, according to me, if all your kavithai's are this much readable then they will be more enjoyable by common man like me, so write more of these style. Do not write for inteluctuals they can write for themselves.
ஆமாம்ல. என்ன தான் விமர்சகனைப் பிடிக்கா விட்டாலும் ‘நினைவிலிருந்து அவன் நீங்க ஆகும் காலம் நீடிக்கும்'.
நல்லா வந்திருக்குங்க.
Post a Comment