May 16, 2008


அருவியின் உய‌ர‌மும் ஆற்றின் தொடக்கமும்

தாம‌த‌ம் ப‌டிந்த‌ கால‌டியில், ப‌ச்சை எஞ்சிய‌
ம‌ஞ்ச‌ள் இலை, காற்றிலாடி விழுகிற‌து; மேலே,
ம‌ர‌ உச்சிக்கு அப்பாலே, முன்னே பறந்திட்ட

வ‌ழிசொல்லி, மெதுவாய் குழுவுள் க‌ரைந்துவிட, அதை
வேறு நாரை நிறைக்கிற‌து; இன்னும்
நேர‌ம் இருக்கிறது, மறையும் க‌திரின் நிழ‌லுக்கு

இருளில் முழுதாய் ம‌றைந்துவிட; புவி சுற்றும்
திசைவழியில், இன்னும் தொலைவு இருக்கிற‌து,
புதிதாய் ஒளியின் க‌ண‌த்திற்கு

3 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கடைசி இரண்டு வரிகள் கொஞ்சம் குழப்பத்தைத் தருது; ஆனா கவிதை பிடிச்சிருக்கு.

இரா. சுந்தரேஸ்வரன் said...

முன்னே பதிவிட்ட கவிதையை 'வாபஸ்' செய்திருந்தேன். முந்தி(!) வெளிவந்திட்ட பதிவு எனக் கொள்ளுங்கள்! உங்க‌ள் க‌ருத்துக்கு ந‌ன்றி ஜ்யோவ்ராம்!

naadal said...

Probably I would give one of the best rating for this. So understand that I am not giving the best rating for few of the previous ones. Sorry I am blunt some times.